பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்துக்கு தடை நீட்டிப்பு..!

share on:
Classic

மோடி திரைப்படத்தை பார்த்த பிறகே அதனை வெளியிடுவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தேர்தல் நேரத்தில் பி.எம். நரேந்திர மோடி படத்திற்கு தடை விதிக்க கோரிய எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் மோடி திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என புகார் கொடுத்தனர். இதையடுத்து தேர்தல் நேரம் என்பதால் திரைப்படத்திற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 

தேர்தல் ஆணையத்தின் தடையை எதிர்த்து தயாரிப்பாளர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியிடலாமா வேண்டாமா என தேர்தல் ஆணையம் முடிவு செய்யவேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் திரைப்படம் மீதான தேர்தல் ஆணையத்தின் கருத்தை சீலிடப்பட்ட கவரில் வரும் 22 ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

 

News Counter: 
100
Loading...

aravind