டிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுப்பு..!

share on:
Classic

டிக்டாக் செயலிக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

டிக்டாக் செயலியை தரவிறக்கம் செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது . இதனையடுத்து டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பதை எதிர்த்து அந்நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

இவ்வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு,  டிக்டாக் செயலிக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த தடையை நீக்க மறுப்பு தெரிவித்தது. மேலும் இந்த வழக்கை வரும் 22ம் தேதிக்கு விசாரிப்பதாக ஒத்திவைத்தது.

 

News Counter: 
100
Loading...

aravind