இரட்டை இலை சின்னம் வழக்கில் இன்று விசாரணை..!

share on:
Classic

இரட்டை இலை சின்னம் தொடர்பாக டிடிவி தினகரனின் மேல்முறையீட்டு வழக்கை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்கிறது.

அ.தி.மு.க.வில், இரு அணியாக செயல்பட்டு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஓரணியாக இணைந்ததை அடுத்து அவர்களின் அணிக்கு அ.தி.மு.க. மற்றும் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக டிடிவி.தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை, தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை, எதிர்த்து தினகரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை மேல்முறையீட்டு மனுவையும், குக்கர் சின்னத்தை ஒதுக்கக் கோரிய மனுவையும் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு டிடிவி தினகரன் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக, டிடிவி தினகரனின் மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும் அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரிக்க உள்ளது.

 

News Counter: 
100
Loading...

sajeev