அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு..!

share on:
Classic

பாபர் மசூதி நில பிரச்சனையை தீர்த்துக்கொள்வதற்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையிலான 3 பேர் கொண்ட மத்தியஸ்த குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.

2.77 ஏக்கர் கொண்ட பாபர் மசூதி நில வழக்கில் மத்தியஸ்தர்களை நியமிப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையில் இஸ்லாமியர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான், மத்தியஸ்தர்களை நியமிக்க ஒப்புக்கொண்டார். ஆனால், இதற்கு இந்து அமைப்புகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மத்தியஸ்தர்களை நியமிக்க உத்தரவிட்டார். 

இதனை தொடர்ந்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது 3 பேர் கொண்ட மத்தியஸ்த குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. அதன்படி தமிழகத்தை சேர்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் வாழும் கலை தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர், வழக்கறிஞர்  ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் பைசாபாத்தில் இந்த குழு செயல்படும் என்றும், முதல் நிலை அறிக்கையை 4 வாரத்திற்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

sajeev