யோகி ஆதித்யநாத் குறித்து கருத்து பதிவிட்ட பத்திரிகையாளர்.., உடனடியாக ஜாமீனில் விடுவிக்க உத்தரவு..!

share on:
Classic

யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் அலுவலம் முன் செய்தியாளர்களை சந்தித்த பெண் ஒருவர், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்து கொள்ள விருப்புவதாகவும், தனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார். இதை டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதையடுத்து, டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற உத்தரப்பிரதேச போலீஸார் அவரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, பிரசாந்த் கனோஜியாவை கைது செய்தது சட்டவிரோதமானது என, அவரது மனைவி ஜகீஷா அரோரா உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான விடுமுறை கால அமர்வு முன்பு வந்தது. அப்போது, எந்த அடிப்படையில் பத்திரிகையாளரை கைது செய்தீர்கள் எனவும், அவதூறு வழக்கிற்காக 11 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க என்ன அவசியம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாறியாக கேள்வி எழுப்பினர். ஒவ்வொரு தனிநபருக்கும் கருத்து சுகந்திரம் உள்ளதாகவும், பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

News Counter: 
100
Loading...

Ragavan