தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

share on:
Classic

தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைப்பதற்கான உறுப்பினர்களை 8 வாரத்திற்குள் தேர்வுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் லோக் ஆயுக்தாவை அமைக்க உத்தரவிடக்கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக தலைமை செயலாளர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும், குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பணி மட்டும் தாமதம் ஆகிக் கொண்டிருப்பதாகவும், அதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, லோக் ஆயுக்தாவை தமிழகத்தில் அமைப்பதற்கு தேவையான உறுப்பினர்களை 8 வாரத்திற்குள் தேர்வுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதற்கு அடுத்த நான்கு வாரத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை நியமிக்கவும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News Counter: 
100
Loading...

aravind