மோடியை திருடர் என விமர்சித்த விவகாரத்தில் ராகுல் விளக்கமளிக்க உத்தரவு..!

share on:
Classic

ரபேல் விவகாராத்தில் மோடியை திருடர் என்று விமர்சித்த ராகுல்காந்தி வரும் 22 ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டுமென என்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ரபேல் ஊழல் விவகாரத்தில் மோடி காவலாளி அல்ல திருடர் என ராகுல் காந்தி பிரசார மேடையில் தெரிவித்தார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது். இதில், ரபேல் விவகாரத்தில் ஊழல் நடைபெறவில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனவும், அதன்பின் எப்படி ரபேல் விவகாரத்தில் மோடி திருடன் என்று பிரசார மேடையில் ராகுல் காந்தி விமர்சித்து பேசுவது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுவது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாக உள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பாக வரும் 22 ஆம் தேதி ராகுல் விளக்கமளிக்க வேண்டும் அறிவிறுத்தியுள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind