டிஜிபிக்கள் நியமன வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..!

share on:
Classic

டிஜிபிக்கள் நியமனம் தொடர்பான வழக்கில் இன்று காலை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. 

நாடு முழுவதும் டிஜபி நியமனம் தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்தது. அதில், டிஜிபியாக தகுதியான, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை தான் மாநில அரசுகள் நியமனம் செய்ய வேண்டும் என்றும் இடைக்கால டிஜிபி நியமனம், ஓய்வு பெறும் நாளில் நியமனம் என்று யாரையும் பதவியில் அமர்த்தக் கூடாது என்றும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. 

டிஜிபிக்கள் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளை தளர்த்தக்கோரி, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று காலை தீர்ப்பளிக்கிறது.

 

News Counter: 
100
Loading...

sajeev