ஸ்ரீசாந்தின் ஐபிஎல் சூதாட்ட வழக்கு..இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்..!

share on:
Classic

ஐ.பி.எல். சூதாட்டப் புகாரில், விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை எதிர்த்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
    
2013ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக பிசிசிஐ ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதித்தது. இதுதொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்க உத்தரவிட்டது. ஸ்ரீசாந்த் விடுவிக்கப்பட்டும் அவர் மீதான தடையை நீக்க பி.சி.சி.ஐ. மறுத்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் மேல்முறையீடு செய்துள்ளார். இதுதொடர்பான விசாரணை முடிந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றம் அந்த வழக்கின் தீர்ப்பை அறிவிக்கிறது.

 

News Counter: 
100
Loading...

sajeev