அயோத்தி வழக்கு விசாரணை திடீர் ரத்து

share on:
Classic

நாளை நடைபெறுவதாக இருந்த அயோத்தி வழக்கு விசாரணை திடீரென ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் 2010-ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வு முன்பு நாளை இந்த வழக்கு விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 

ஆனால் இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி எ.ஏ.பாப்டேவுக்கு விசாரணையில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், நாளை நடைபெறுவதாக இருந்த வழக்கு விசாரணை ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind