ரஃபேல் வழக்கு : தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..! 

share on:
Classic

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான மேல்முறையீடு வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் அதன் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.

பிரான்சிடம் இருந்து 36 ரபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 59,000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் ஊழல் முறைகேடு நடந்ததாக குற்றஞ்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், ரபேல் ஆவணங்கள் திருடப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளவற்றை வைத்து விசாரிக்க கூடாது என்றார். 

அதை மறுத்த நீதிபதி ஜோசப், ஊழல் நடந்திருக்கும் பட்சத்தில் அனைத்து ஆவணங்களையும் விசாரிக்க முடியும் என்றார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை தொடர்ந்து ரபேல் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

 

News Counter: 
100
Loading...

sajeev