தமிழரசன் படத்தில் இணைந்த சுரேஷ் கோபி..!!

share on:
Classic

கொலைகாரன், அக்னிச் சிறகுகள் படங்களைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி  தமிழரசன், காக்கி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

இதில் தமிழரசன் படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்க, விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சோனு சூட் வில்லனாகவும், பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த், இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் உள்ளிட்ட பலரும் தமிழரசன் படத்தில் நடித்து வருகின்றனர்.  

இப்போது தமிழரசன் படத்தில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவர் கடைசியாக விக்ரமின் `ஐ' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் டாக்டர் தோற்றத்தில் விஜய் ஆண்டனியுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இசைஞானி இளையராஜா இசையமைக்கும் தமிழரசன் படத்தை எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கின்றார்.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan