இயக்குனர் பாண்டிராஜ் மீது கடும் கோபத்தில் இருக்கும் சூர்யா..?

share on:
Classic

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் சூர்யா. இவர் செல்வராகவன் இயக்கத்தில்  நடித்த ‘என்.ஜி.கே.’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. 

என்.ஜி.கே படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்துல நடித்து வருகிறார். இந்தப் படமும் முடியும் தருவாயில் உள்ள நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ரொம்ப நாளாகவே ஒரு கிராமத்து படத்தில்  நடிக்க வேண்டும் என்று சூர்யா முடிவு செய்திருந்தார். 

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்த சூர்யா இதுக்காக தனது கால்ஷீட்டை அந்தப் படத்திற்காக ஒதுக்கி வைத்திருந்தார். ஆனால், திடீரென்று இயக்குனர் பாண்டிராஜ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்ததை தொடர்ந்து இயககுனர் பாண்டிராஜின் இந்த செயலைக் கண்டு நடிகர் சூர்யா அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan