"கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவுக்கு உண்டு" 

share on:
Classic

கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவுக்கு உண்டு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ-மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருவதாகவும், புதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் தனக்கும் உடன்பாடு உண்டு என தெரிவித்துள்ளார். 

"வரைவு அறிக்கை" மீது கருத்து சொன்னதற்காக, சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப்போக்கை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind