மோடி ஹிட்லரை போல் நடந்து கொள்கிறார் - சொன்னது யார் தெரியுமா?

share on:
Classic

மோடி ஹிட்லர் போல செயல்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சுஷில் குமார் ஷிண்டே கடுமையாக விமர்சித்துள்ளார்.

மோடி ஒரு சர்வாதிகாரி:
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுஷில் குமார் ஷிண்டே செய்தியாளர்களிடம் பேசிய போது “அவர் யாரையாவாது கேட்கிறாரா? அவர் நினைப்பதை அவர் செய்கிறார், அவர் பணமதிப்பிழப்பை திணிக்கிறார், அவர் இரவோடு இரவாக சிபிஐ இயக்குநரை பதவி நீக்கம் செய்கிறார் இது சர்வாதிகாரம் இல்லையா” என்று சுஷில் குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் “பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவிக்கும் முன் அவர் நிதி அமைச்சரிடம் விவாதித்தாரா? அல்லது ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் விவாதித்தாரா? இல்லை அவர் என்ன நினைக்கிறாரோ அதையே செய்கிறார், இது தான் சர்வாதிகாரம்” என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜனநாயகத்தை மதிக்காதவர்:
சோபாபுர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காவல் துறையினர் காங்கிரஸ் கட்சியினரை தாக்கியதை சுட்டிக்காட்டி உள்ள சுஷில் குமார், ஜனநாயகத்தில் ஆர்ப்பாட்டம் நடப்பதற்கு உரிமை உள்ளது என்று கூறியுள்ள அவர், முதல் முறையாக காவல்துறை வழிகாட்டல் படி போராட்டம் நடந்ததாக குறிப்பிட்டார். பிரதமர் மோடி அரசியலமைப்பு சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் உரிய மரியாதையை கொடுக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

News Counter: 
100
Loading...

youtube