தூதரங்களுக்கு மட்டும் குறிவைத்து அனுப்பப்பட்ட மர்ம பார்சல்..!

share on:
Classic

மெல்பர்னில் உள்ள இந்திய தூதரகம் உட்பட பல நாடுகளின் தூதரகங்களில் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூதரங்களில் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் : 

மெல்பர்னில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் சந்தேகத்திற்கிடமான ஒரு கவரை கண்டறிந்த அதிகாரிகள் அதை திறந்து பார்த்த போது, 3 பாக்கெட் வெள்ளை பவுடர், சிறிய டைல் (Tile)ஆகியவை இருந்தன. அந்த பொருட்கள் எதையும் அதிகாரிகள் தொடவில்லை. ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos) என்ற வார்ததையும் அதில் கவரில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் வெளிநாட்டு விவகாரங்கள் துறை அதிகாரிகள் பாகிஸ்தான் தூதரகத்தை தொடர்பு கொண்டு மற்ற தூதரங்களுக்கும் இதே போல பொருட்கள் அனுப்பப்பட்டதாக எச்சரித்தனர்.
 

 

22 இடங்களுக்கு அனுப்பப்பட்ட பொருட்கள்: 

அமெரிக்க, பிரிட்டிஷ், இந்தியா, இந்தோனேஷியா,ஜெர்மனி, இத்தாலி,சுவிஸ்,ஸ்பெயின், தைவான், கிரீஸ் உட்பட 22 நாடுகளின் தூதரகங்களுக்கு இதே தொகுப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது. மெல்பர்னில் உள்ள பல தூதரகங்களுக்கு பொருட்கள் அனுப்பட்டதால் அவசர நிலை நடவடிக்கைகள் எடுத்துவருவதாக ஆஸ்திரேலியா பெடரல் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினர். குறிப்பாக தூதரகங்களை மட்டும் குறிவைத்து இந்த பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 

தயார் நிலையில் ஆஸ்திரேலிய காவல்துறை:

தூதரக அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் அந்த பொருட்களை சோதனை செய்து வருகின்றனர். எமெர்ஜென்ஸி வலைதளம் மூலமாக 12-க்கும் மேற்பட்ட ‘அபாய பொருட்கள் எச்சரிக்கை’ விடப்பட்டுள்ளது. சேதங்கள், பாதிப்புக்கள் குறித்த விவரங்கள் இதுவரை தெரியவில்லை. காவல்துறை,தீயணைப்புத் துறை வீரர்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிட்னியில் சந்தேகப்படும் படியான வெள்ளைப் பவுடர் பாக்கெட் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

News Counter: 
100
Loading...

youtube