தள்ளுபடியால் தள்ளு முள்ளு..!

share on:
Classic

பிரபல துணிக்கடையின் ஆண்களுக்கென பிரத்யோகமான புதிய கிளை அறிவித்த தள்ளுபடியால் கடையின் முன் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு எதிர்புறம் பிரபல துணிக்கடையின் ஆண்களுக்கென பிரத்யோகமான புதிய கிளை திறக்கபட உள்ளதாக ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், சமூக வலைத்தலங்களிலும் அதிக அளவில் பகிரப்பட்டு வந்தது. விளம்பரங்கைளில் இடம்பெற்றிருந்த கவர்ச்சிகர வசனங்கள் பலரது கவனத்தை பெற்றது. இளைஞர்களின் முக்கிய உடைகளான ஜீன்ஸ் டீசர்ட் போன்றவற்றிர்களுக்கு திறப்பு விழா சலுகையாக அவர்கள் அளித்திருந்த தள்ளுபடி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

ஏற்கனவே இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள் மதுரை சேலம் ஈரோடு நாமக்கல் கோவை என பல பகுதிகளில் செயல்பட்டு வரும் நிலையில், சென்னையில் துவங்கப்பட உள்ள புதிய கிளையில், முதல் நாளில் டீ சர்ட் 20 ரூபாய்க்கும், சர்ட் 80 ரூபாய்க்கும் மேலும் ஜீன்ஸ் பேண்டுகள் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. 

இந்த விளம்பரத்தினால் கவரப்பட்ட இளைஞரகள் பலரும் இன்று அதிகாலையில் கடை திறப்பதற்கு முன்பாகவே கடையில் குவியத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் அப்பகுதில் ஏராளமானவர்கள் நீண்ட வரிசையில் காத்துநின்றனர். இந்த கூட்ட நெரிசல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதற்கிடையே காலை துணிக்கடை திறக்கப்பட்டதும். அப்போது வரிசையில் காத்து நின்ற பொதுமக்கள் ஒரே நேரத்தில் கடைக்குள் நுழைய முயன்றதால் அவர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு மோதல் உருவானது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார்  கூட்டத்தை கட்டுப்படுத்த முயனறனர், ஆனால் நேரம் அதிகரிக்க அதிகரிக்க கூட்டம் அதிகமானதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.  ஒரு கட்டத்திற்கு மேல் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய அந்நிறுவன ஊழியர்களும் போலிசாரும் கடைக்கு பூட்டு போட்டு சென்றனர். இதனால் மிகுந்த ஆர்வத்துடன் வந்த வாடிக்கையாளர்கள் பொருட்கள் ஏதும் வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

 

News Counter: 
100
Loading...

Ragavan