நெருக்கடியிலிருந்து மீட்க ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்தில் மாற்றம் செய்ய பரிந்துரை..!!

share on:
Classic

விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை பெறும் நெறுக்கடியிலிருந்து மீட்க பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட கடந்தாரர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

நாட்டின் இரண்டாவது விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சமீப காலமாக பெறும் நிதி நெறுக்கடியை சந்தித்து வருகிறது. தற்போது இந்த நிறுவனத்துக்கு கிட்டதட்ட ரூ. 8200 கோடிகடன் உள்ளது. மேலும் விமான ஓட்டுனர்களுக்கு சம்பள பாக்கி பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த விமானங்கள் பறப்பதில் பெறும் சிக்கல் நிலவுகிறது.

ஜெட் ஏர்வேஸ் விமான ஓட்டுநர்களுக்கு மார்ச் 31-க்குள் சம்பள பாக்கியைத் தராவிட்டால், ஏப்ரல் 1-ல் வேலை நிறுத்தத்தைத் தொடங்க உள்ளதாகக் கூறியுள்ளனர். நிதி நெறுக்கடியில் இருந்து மீட்க, விமான சேவையை தொடர்ந்து வழங்க உதவ தயாராக இருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி தலமையிலான கடன்தாரர்கள் குழு தெரிவித்துள்ளது.

இது சம்மந்தமாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை நேற்று பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ரஜ்னிஷ் குமார், விமானப் போக்குவரத்துத் துறை செயலர் பிரதீப் சிங் கரோலா, பிரதமர் அலுவலக செயலர் நிருபேந்திரா மிஸ்ரா ஆகியோர் சந்தித்து ஆலோசித்துள்ளனர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்க கடன்தாரர்கள் ஒத்துழைப்புத் தருவதாகவும் உறுதியளித்தனர்.

மேலும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாகம் சரியில்லை என்றும், ஜெட் ஏர்வேஸை மீட்டு தொடர்ந்து விமான சேவையை வழங்க வேண்டுமெனில் நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர். 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan