ஸ்விகியின் தலைமை பெறுப்பில் தமிழக திருநங்கை..!!

share on:
Classic

ஸ்விகியின் தலைமை பொறுப்பில் தமிழகத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர் அமர வைக்கப்பட்டுள்ளார்.

சமூகத்தில் திருநங்கைகள் புறக்கணிக்கப்பட்ட காலங்கள் மாறி  தற்போது அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் பொள்ளாச்சியை சேர்ந்த சம்யுக்தா என்ற திருநங்கை பிரபல உணவு டெலிவரி நிறுவணமான ஸ்விகியின் தலைமை பொறுப்பிற்கு வந்துள்ளார்.

தமிழகத்தின் பொள்ளாச்சியில் பிறந்த சம்யுக்தா விஜயன், திருநங்கையான இவர் 10 ஆண்டுகள் அமேசான் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தது வந்தார். 2017 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றியிருப்பதால் ஸ்விகி நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு இவர் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்விகியின் தலைமை பொறுப்புக்கு வந்தது குறித்து சம்யுக்தா கூறுகையில், என் திறமையை மதித்து ஸ்விகி எனக்கு தலைமை பொறுப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி. இனி நானும் ஒரு அங்கமாக இருந்து இந்த நிறுவனத்தில் பணியாற்றுவேன். இந்திய கார்பரேட் நிறுவனங்கள் தற்போது திருநங்கைகளுக்கு ஆதரவு அளிக்க தொடங்கியிருப்பது மிக்க மகிச்சையாக உள்ளது என தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan