பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 112-ஆக உயர்வு.. மேலும் 79 பேர் மருத்துவமனையில் அனுமதி

share on:
Classic

ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 112-ஆக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், அங்கு பலியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பார்மர், ஜெய்சால்மர், ஜெய்ப்பூர், உதய்ப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று 5 பேர் பலியாகினர். இதனால் 2019-ம் ஆண்டு துவக்கம் முதல் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 112-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 79 பேர் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

News Counter: 
100
Loading...

Ramya