சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படை வான்வழி தாக்குதலில் 30 பேர் பலி

share on:
Classic

சிரியா நாட்டில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். 

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையும், அரசுக்கு ஆதரவாக  ரஷ்ய ஆதரவு பெற்ற அரசு படைகள் ஆகியவையும் போரில் இறங்கி உள்ளன. 

இந்நிலையில், ஈராக் எல்லை அருகே டெயிர் அல் சோர் மாகாணத்தில் வசித்து வந்தவர்கள் மீது அமெரிக்க கூட்டுப் படையினர் வான்வழி தாக்குதல் நடத்தினர்.

 இந்த தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 30 பேர் பலியாகினர். மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என கூறப்படுகிறது.

News Counter: 
100
Loading...

vijay