போருக்கு பிறகு சிரியாவின் முதல் கால்பந்து போட்டி..இரு மனநிலையில் ரசிகர்கள்..!

share on:
Classic

போரின் காரணமாக சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து விலகியிருந்த சிரியா 8 ஆண்டுகளுக்கு பிறகு களத்திற்கு திரும்பியுள்ளது.

சிரியாவில் நடந்த கடுமையான போர் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டிருந்தது. இதனால் கடந்த வருடம் ரஷ்யாயில் நடைபெற்ற உலக கோப்பையில் கூட பங்கேற்க முடியாத பயங்கர அதிருப்தியில் இருந்தது சிரியா. இப்போது அங்கு நிலை கொஞ்சம் கட்டுக்குள் வர, திரும்ப இயல்பு நிலை திரும்பி வருகிறது. 

ஆசிய போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் இதில் விளையாட சிரியா அணி தகுதி பெற்றுள்ளது. எனினும் சிரியாவின் எல்லா ரசிகர்களும் இதை குறித்து மகிழ்ச்சியாய் இருப்பது போல் தெரியவில்லை. 
அரசாங்கத்தின் கீழ் இருக்கும் பகுதி மக்களை இதை குறித்து பெரு மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், சிரியா அரசாங்கத்துக்கு எதிராக போராடி வரும் மக்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் "இந்த போட்டிக்கு தகுதி பெற்றதே எங்களுக்கு வெற்றி தான். போரில் ஏற்பட்ட வலியும் வேதனையும் எங்களுக்குள் அபரிவிதமான நேர்மறை எண்ணங்களை அளித்துள்ளது. இதில் சிறப்பாக விளையாடி சிரியாவிற்கு பெருமை சேர்ப்போம்" அந்த அணி வீரர் 'முயத் அஜான்' கூறியுள்ளார்.

News Counter: 
100
Loading...

sankaravadivu