டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு...

share on:
Classic

டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட்டு வீரர்களின் ரன்கள் மற்றும் விக்கெட்ஸ் அடிப்படையில்  முதல் 100 பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்கள், ஆல் ரவுண்டர்கள் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பேட்ஸ்மேன்: 

டி20 போட்டி தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 858 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். நியூஸிலாந்து வீரர் கொலின் முன்ரோ 809 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், ஆஸ்திரேலியா வீரர் ஆரோன் ஃபின்ச் 806 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். பட்டியலில் முதல் 10 வீரர்கள் வரிசையில் இந்திய அணி வீரர் லோகேஷ் ராகுல்  719 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தையும் , ரோஹித் ஷர்மா 689 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தையும் பெற்றுள்ளனர். 100 பேர் கொண்ட இப்பட்டியலில் ஷிகர் தவான், விராட் கோலி, தோனி உட்பட 8 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Related image

பந்து வீச்சாளர்கள்:

பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த ரஷீத் கான் 793 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பெற்றிருக்கிறார். பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஷதாப் கான் 752 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இந்திய அணியை சேர்ந்த இளம் வீரர் குல்தீப் யாதவ் 714 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார். முதல் 10 பேரில் குல்தீப் தவிர்த்து வேறு எந்த பந்து வீச்சாளர்களும் இடம் பெறவில்லை என்பது வருத்தமளிக்கிறது. இருப்பினும் சஹால் 630 புள்ளிகளை பெற்று 11-வது இடத்தை பெற்றிருக்கிறார். முதல் 100 பேர் கொண்ட இப்பட்டியலில் ஒன்பது இந்திய பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றிருக்கின்றனர்.

ஆல்ரவுண்டர்கள் :  

ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் 362 புள்ளிகளை பெற்று ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் முதலிடம் பெற்றுள்ளார். பங்களாதேஷ் வீரர் ஷாகிப் அல் ஹாசன் இரண்டாம் இடத்தையும், ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி  மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளனர். முதல் 3 மற்றும் 10 பேரில் கூட இந்திய அணி வீரர்கள் பெயர் இடம்பெறவில்லை. முதல் 100 பேர் கொண்ட பட்டியலில் இந்திய ஆல்ரவுண்டர் விராட் கோலி  125 புள்ளிகளை பெற்று 18-வது இடத்தில உள்ளார். மேலும் சுரேஷ் ரெய்னா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட 5 வீரர்கள் மட்டுமே இப்படியலில் இடம்பெற்றுள்ளனர்.

News Counter: 
100
Loading...

youtube