நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்த இந்திய அணி

share on:
Classic

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் ஆட்டம் வெலிங்கடனில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி, பந்து வீச்சை தேர்தெடுத்தது. இதனையடுத்து பேட்டிங் செய்யத் தொடங்கிய நியூசிலாந்து அணி, அதிரடியாக ரன் சேர்த்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்த தொடக்க ஆட்டக்காரர் டிம் செய்பெர்ட் 43 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். பின்னர் வந்த வீரர்களும் அதிரடி காட்ட, நியூசிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 219  ரன்கள் குவித்தது.

பின்னர், 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ரோஹித் சர்மா 1 ரன்னுடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த வீரர்களும், நியூசிலாந்தின் மிரட்டலான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி 139 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. அதிக பட்சமாக தோனி 39 ரன்கள் அடித்தார். இதன்மூலம், 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind