டி20 தொடரை வெல்லுமா இந்தியா? வெஸ்ட் இண்டீசுடன் இன்று பலப்பரீட்சை

share on:
Classic

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டி-20 போட்டி, லக்னோவில் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், 2-வது டி-20 போட்டி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில், வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

அதேநேரம், கட்டாய வெற்றி என்ற நெருக்கடியில் வெஸ்ட் இண்டீஸ் அணி உள்ளது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால், இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

sasikanth