"லாரிகளில் தொழிலாளர்களை அழைத்து செல்வதை தடுக்க வேண்டும்"

share on:
Classic

உதகையில் சரக்கு வாகனங்களின் மேல் தொழிலாளர்களை ஏற்றிச்செல்பவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உதகை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பயிரப்படும் கேரட்டுகள் மேட்டுப்பாளையம் கேரட் சந்தையில் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு செல்லும் சரக்கு லாரிகளில் கேரட்டுகளை நிரப்பி அதன் மேல் தொழிலாளர்கள் அமர்ந்து செல்வதால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. போலீசார் பல முறை எச்சரித்தும் இந்நிலை தொடர்வதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

News Counter: 
100
Loading...

vinoth