சிகிச்சையின் போது கவனக்குறைவாக செயல்படும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை - சென்னை உயர்நீதிமன்றம்

Classic

சிகிச்சையின் போது கவனக்குறைவாக செயல்படும் மருத்துவர்கள் மீது குற்ற நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பே விதிகள் வகுத்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, 2008ம் ஆண்டு ஜூலை மாதமே இது தொடர்பாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. அரசு மருத்துவமனைகள் மீது தாக்குதல் சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க மருத்துவமனை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து மாதம் தோறும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்த அறிவுறுத்தி இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி,  இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை குறித்து அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

News Counter: 
100
Loading...

aravind