புளி சாப்பிட்டால் எலும்பு தேய்மானம் குறையும்..! புளிமருத்துவம்...

share on:
Classic

நாம் அன்றாடம் உணவில் சுவைக்காக புளி சேர்த்துக் கொள்கிறோம். ஆனால், அது சுவைக்காக மட்டுமல்ல என்பதை தெரிந்துகொள்ளுங்கள். பார்த்தாலே சுவை நரம்புகளைத் தூண்டி, வாயில் எச்சில் ஊரவைக்கும் புளியில், பல மருத்துவ குணங்கள் உள்ளது.

100 கிராம் புளியில் ஒரு நாளைக்கு நமக்குத் தேவைப்படுகிற இரும்புச்சத்து முழுமையும் கிடைக்கிறதாம். 50 வயதுவரை ஒரு நாளைக்கு 100 கிராம் புளி சாப்பிடலாம் எனக் கூறப்படுகிறது. ஏனெனில், நம் உடலுக்கு, தேவையான அளவு புளி சாப்பிட்டல், எலும்புகளின் தேய்வால் உண்டாகும் மூட்டுவலி விரைவிலேயே கட்டுக்குள் வரும். அது, எலும்புகள் தேய்மானத்தைக் குறைக்கும் தன்மையுடையது.

மேலும், ஜீரணக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு ஆற்றல், உடலின் ரத்த ஓட்டம் உள்ளிட்டவைகளை புளி சீராக்குகிறது. உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகளைக் கரைக்கும் சக்தியும் புளிக்கு இருக்கிறதாம். கால்களில் உண்டாகும் நீர்த்தேக்கம், வீக்கம், கீழ்வாதம் போன்றவற்றையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

News Counter: 
100
Loading...

Ragavan