ஹிந்தி தெரியாததால் தமிழனை தரைகுறைவாக நடத்திய மும்பை விமான நிலைய அதிகாரி?

share on:
Classic

தமிழக இளைஞர் ஒருவருக்கு ஹிந்தி தெரியாததால் மும்பை விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ஆபிரகாம் சாமுவேல் என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை நியூயார்க் செல்வதற்காக மும்பை சத்ரபதி விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கு குடியுரிமை பிரிவில் இமிகிரேஷனுக்காக அங்கிருந்த ஒரு அதிகாரி ஹிந்தியில் பேசியுள்ளார்.

அதற்கு சாமுவேல் எனக்கு ஹிந்தி தெரியாது தமிழ்,ஆங்கிலம் மட்டுமே தெரியும் என்று ஆங்கிலத்தில் கூறியுள்ளார்.அதற்கு எதையும் காதில் வாங்கி கொள்ளாத விமான நிலைய அதிகாரி இந்தியாவில் இருந்து கொண்டு இந்தி தெரியாதா? அப்படின்னா தமிழ்நாட்டுக்கே போ என்று இமிகிரேஷன் கொடுக்காமல் அவனப்படுத்தியுள்ளார்.

இதனால் சாமுவேல் அங்கிருந்த உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.இதனையடுத்து விரைந்து வந்த உயரதிகாரி விமான அதிகாரியிடம் விசாரித்த பொழுது மீண்டும் அதையே கூறி அவமானப்படுத்தியுள்ளார். இதனையடுத்து உயரதிகாரி வேறு அதிகாரி மூலம் இமிகிரேஷன் வழங்க ஏற்பாடு செய்தார். இந்த விவகாரம் குறித்து அந்த பிரச்சனை ஏற்படுத்திய அதிகாரியை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விமானத்தை பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் சாமுவேல் இருந்ததால் எந்த ஒரு பிரச்சனையும் செய்யாமல் அங்கிருந்து சென்ற சாமுவேல் அந்த அதிகாரியை ட்விட்டரில் கிழித்து தொங்கவிட்டார்.

இந்த பிரச்சனை தொடர்பாக சாமுவேல் ட்விட்டரில் கூறியது : 

Was just denied immigration by an immigration officer in counter 33 at Mumbai CST AIRPORT, for knowing only Tamil and English and NOT hindi! What a disaster! Reported the officer, hope they take action. @SushmaSwaraj @mkstalin @narendramodi

— Abraham Samuel (@abrahamsamuel) January 8, 2019

மும்பை விமான நிலையத்தில் 33வது கவுண்டரில் இருந்த விமான நிலைய அதிகாரி எனக்கு ஹிந்தி தெரியாத காரணத்தினால் எனக்கு இமிகிரேஷன் கொடுக்க மறுத்து விட்டார். அது தொடர்பான புகாரில் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன் என்றும், இவரைப் போன்ற முட்டாள்கள் எப்படி இந்திய அரசு பணிகளில் பணியாற்றுகிறார்கள் என்ற ஆச்சர்யமும், அவமானமுமாக இருக்கிறது என்று சாமுவேல் ட்வீட் செய்துள்ளார். எனக்கு விமானத்திற்கு நேரம் ஆகிவிட்டது இல்லையென்றால் அந்த அதிகாரியை அங்கேயே தங்கி ஒரு வழி செய்திருப்பேன் என்றார்.

நான் அவரிடம் ஆங்கிலத்தில் தான் பேசினேன். எனக்கு ஹிந்தி தெரியாததை குற்றமாக கருதிய அதிகாரி இமிகிரேஷன் வேலைக்கு தகுதி இல்லாத முட்டாள் என்றும், அதே அதிகாரி ஆங்கிலத்தில் பேசிய வெளிநாட்டுக்காரருக்கு என் கண் முன்னே இமிகிரேஷன் கொடுத்து அனுப்பிவைத்தார் என்று அவரது வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

நான் ஒரு இந்தியன். ஹிந்தி பேசுவதில்லை அவ்வளவுதான், சொந்த மொழியில் பேசும் இந்தியர்களை அவமதிக்காதீர்கள். நான் இந்தியன் என்பதில் பெருமைப்படுகிறேன், அதற்கும் மேலாக தமிழன் என்று பெருமையாக சொல்லுவேன், உங்களுக்கு பிரச்சனை என்றால் உங்களை இந்தியர்கள் என்று சொல்லிக்கொள்ள உங்களுக்கு தகுதி இல்லை என்று ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

The immigration officer at counter 33 in the Mumbai International Airport, clearly profiled me, saw my Indian passport and assumed that i should know Hindi and even after politely informing him that I do not know Hindi, continued his impolite behavior @MEAIndia

— Abraham Samuel (@abrahamsamuel) January 8, 2019

தமிழ்நாடும் இந்தியாவின் ஒரு அங்கம் தான்.இந்த பிரச்சனையை ஏற்படுத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன். இது போன்ற காரணங்களால்தான் எந்த ஒரு தேசிய கட்சியும் தமிழகத்தில் கால் ஊன்ற முடியவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு துறை சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சசி தரூர் உள்ளிட்டோருக்கு டேக் செய்து ட்விட்டரில் புகார் தெரிவித்துள்ளார். 

 

 

News Counter: 
100
Loading...

youtube