தமிழக இடைத்தேர்தல் : ம.நீ.ம. விருப்ப மனு விநியோகம் தொடக்கம்...

share on:
Classic

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு விரும்புபவர்களுக்கான விருப்பமனு விநியோகம் இன்று முதல் தொடங்கியது.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட 1300-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கான நேர்காணல் நேற்று முன்தினம் முதல் நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க, 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அறிவித்துள்ளார். அதற்கான விருப்ப மனு விநியோகம் இன்று காலை முதல் தொடங்கியுள்ளது. இதுமட்டுமின்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் இணையதளத்திலும், மய்யம் கனெக்ட் செயலி மூலமாகவும் விருப்ப மனுக்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை ரூ. 10,000 காசோலையுடன் இணைத்து வரும் சனிக்கிழமைக்குள் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan