தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு..!

share on:
Classic

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலையானது குமரி வரை நிலைக் கொண்டிருப்பதால் ஏற்படும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சித்தார் பெருஞ்சாணி பகுதிகளில் 6 செண்டி மீட்டர் மழையும், பேச்சிப்பாரை சுற்றுவட்டாரத்தில் 3 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan