கோமதி மாரிமுத்துவுக்கு முதலமைச்சர் வாழ்த்து..!

share on:
Classic

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த செய்தியை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும், தனது சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். "சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு, மேலும் பல வெற்றிகள் குவித்து, இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திடவேண்டும்" எனவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan