தேர்தல் பறக்கும் படை பணம் பறிமுதல் : தமிழகம் முதலிடம்..!

share on:
Classic

தமிழகத்தில் இதுவரை ரூ. 514 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தலையொட்டி, அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க, தேர்தல் ஆணையம், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, ஆவணமில்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட, நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் இதுவரை ரூ. 2.628 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ. 514.57 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பணம் பறிமுதலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan