அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!!

share on:
Classic

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், சென்னையை பொருத்தவரை ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, பேச்சிப்பாறை 4 செ.மீ, சித்தேரி 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து, தமிழகத்தின் உள்மாவட்டம் மற்றும் வடக்கு மற்றும் வடமேற்கு மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2-லிருந்து 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள், காலை 11 மணியிலிருந்து மாலை 3.30 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan