தமிழ் புத்தாண்டு : பிரதமர், குடியரசுத் தலைவர் டிவிட்டரில் வாழ்த்து..

share on:
Classic

தமிழ்ப் புத்தாண்டை யொட்டி, தமிழக மக்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நம் தமிழ்நாட்டில் உள்ள சகோதர, சகோதரிகள் மற்றும் உலகில் உள்ள அனைத்து தமிழ் உறவுகளுக்கும் தன்னுடைய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். மேலும், பிறக்கக்கூடிய இந்த வருடம் அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியும், இன்பமும் மற்றும் செழிப்பும் வழங்கிட வேண்டிக் கொள்வதாகவும் தனது வாழ்த்து செய்தியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழ் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும், வரும் ஆண்டில் தமிழ் மக்களின் ஆசைகள் நிறைவேறட்டும் என்றும் அனைவரின் வாழ்விலும், ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெருகட்டும் என்றும் பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

vinoth