தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்..!

share on:
Classic

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.

முதுபெரும் தமிழறிஞரும், தமிழராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான சிலம்பொலி செல்லப்பன் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சிலம்பொலி செல்லப்பன் 1929ம் ஆண்டு முதல் டிசம்பர் மாதம் 22ம் தேதி நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையம் எனும் ஊரில் பிறந்தார். கணிதப் பேராசியராகப் பணியைத் தொடங்கிய இவர், தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். 

உலக தமிழ் மாநாட்டு உதவி அலுவலர், தமிழ் வளர்ச்சி இயக்குனர், உலக தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்த இவர், தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது விருது பெற்றுள்ளார். அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவரது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் சிவிளியம்பாளையத்தில்  நாளை இறுதிசடங்கு நடைபெற உள்ளது.

News Counter: 
100
Loading...

aravind