வாரி இறைக்கும் சேற்றிலும் கூட தாமரையை மலர வைப்போம் தமிழிசையின் ஆவேசம்

share on:
Classic

எங்கள் மீது விழும் சேற்றை வாரி இறைத்தாவது தாமரையை மலர வைப்போம்.

திருமாவளவன், வைகோ ஆகியோரால் ஸ்டாலினுக்கு பெரிய தலைவலி வரப்போகிறது என்பதால், அதை முதலில் அவர் பார்க்கட்டும் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார். ஸ்டாலினுக்கும் தமிழிசைக்கும் ட்விட்டர் போர் வலுத்து வருகிறது.  அது இப்போது மழை, தாமரை, சூரியன் என்று போய் கடைசியில் சேறு வரை வந்துவிட்டது

 மேகதாது அணை விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு அனைத்துக் கட்ச்சிக் கூட்டத்தை நடத்தினார். ஆனால் இந்த கூட்டத்தில் பாஜாக, அதிமுக கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. இதன் தொடர்ச்சியாக, திருச்சியிலும் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் திமுக சார்பாக நடைபெற்றது. அப்போது மேகதாது விஷயத்தில் ஒன்றுபடாத கட்சிகளான குறிப்பாக பாஜாக தலைவர்களை திமுக கூட்டணி கட்சியினர் கடுமையாக பேசினர்.

கூட்டணி தலைவர்கள் பாஜாக தரப்பினரை குற்றஞ்சாட்டி பேசியதற்கு, ட்விட்டரில் தமிழிசை ஒரு பதிவை போட்டார். அதில் இனி மழை காலம் ஆரம்பம் மழை வந்தால் சூரியன் மறையும் குளம் நிறையும் தாமரை மலரும் செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம் ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரை மலர செய்வோம் காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும் என்று தெரிவித்தார்.

ஸ்டாலின் பதில் ட்வீட் போட்டார். அதில் "சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்: தாமரை மலர சூரிய சக்தி தேவை! சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்!" என்றார்.

 தமிழகத்தில் தாமரை மலருமா என்பது குறித்து எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒரு பதற்றம் நிலவுகிறது. ஆனால் கண்டிப்பாக தமிழகத்தில் தாமரை மலரும். குளத்திலும் தாமரை மலரும்!!! களத்திலும் தாமரை மலரும்!! தாமரை மலருமா? மலராதா? என்பது குறித்து திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் யாரும் கவலைப்பட தேவையில்லை.

எங்கள் மீது விழும் சேற்றை வாரி இறைத்தாவது தாமரையை மலர வைப்போம் எண்றுசெய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தராஜன் பேட்டி அளித்துளார்.

News Counter: 
100
Loading...

youtube