சுட்டுப்போட்டால் தாமரை மலராது ஓட்டு போட்டால் தான் தாமரை மலரும் - ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி

share on:
Classic

தமிழகத்தில் சுட்டு போட்டாலும் தாமரை மலராது என்று ஸ்டாலின் கூறியதற்கு தமிழிசை கிண்டலாக பதிலளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “ஸ்டாலின் தமிழகத்தில் சுட்டு போட்டாலும் தாமரை மலராது என்று சொல்கிறார், சுட்டு போட்டால் தாமரை மலராது, ஓட்டு போட்டால் தான் தாமரை மலரும், மக்கள் ஓட்டு போடுவார்கள் தாமரை நன்றாக மலரும்” என்று கிண்டலாக கூறினார்.

மேலும் தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இடஒதுக்கீடு மசோதா தமிழகத்தில் பின்பற்றப்படும் மசோதாவை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் தெரிவித்தார். புதிய கல்வி கொள்கையில் எந்த மொழியையும் கட்டாயப்படுத்தி படிக்கச் சொல்வதற்கு பாஜவுக்கு விருப்பம் இல்லை என்றும் தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

sasikanth