பாஜக வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு - பியுஷ் கோயல்

share on:
Classic

தமிழகத்திற்கான பாஜக வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என மத்திய அமைச்சரும், பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

அதிமுக, பாஜக கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ஜி.கே.வாசனை பியுஷ் கோயல்  சந்தித்து பேசினார். இதன் பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அவர், ஊழல் கட்சிகளை வீழ்த்த தாங்கள் ஒன்றிணைந்துள்ளதாக கூறினார். அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த கோயல், தமிழகத்திற்கான பாஜக வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

 

News Counter: 
100
Loading...

vinoth