தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு பெருகியுள்ளதா?.. உளவுத்துறையின் தகவலை விட திருப்பூரில் அதிகளவு திரண்ட மக்கள்..

share on:
Classic

அண்மையில் திருப்பூரில் நடைபெற்ற பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்திற்கு மத்திய உளவுத்துறை மற்றும் தமிழக காவல்துறையினர் அளித்த அறிக்கையைவிட அதிகளவில் பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரிடமும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் தமிழகத்தில் பாஜகவுக்கு அதரவு பெருகிவிட்டதா?.. வரும் மக்களவைத் தேர்தலிலும் இது எதிரொலிக்குமா?.. தமிழகத்தில் கால்பதிக்க விரும்பும் பாஜவின் ஆசை நிறைவேறுமா?..தற்போது தமிழகத்திலும் மோடி அலை வீசத்தொடங்கிவிட்டதா?.. விரிவாக அலசுவோம்.

மோடியின் தமிழக வருகை : 
வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ் இடையிலான சென்னை மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பூருக்கு வருகை தந்தார். மெட்ரோ ரயில் சேவையை காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்த அவர், சென்னை விமான நிலையம், திருச்சி விமான நிலையம் ஆகியவற்றை நவீனப்படுத்தும் திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார். மேலும் திருப்பூரில் புதிகாக கட்டப்பட உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கும் அடிக்கல் நாட்டியும், மேலும் பல திட்டங்களையும் தொடங்கியும் வைத்தார். இதனைத் தொடர்ந்து திருப்பூரில் பாஜகவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி, காங்கிரஸ் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

 

திருப்பூர் தொழில் நிறுவனங்கள் பாதிப்பு :

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கொண்டு வரப்பட்ட மாற்றங்கள், ஏற்றுமதியாளர்களின் சலுகைகள் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால், திருப்பூர் தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் மத்திய அரசு தொழில் துறையினருக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதால் மோடி தலைமையிலான பாஜா அரசு மீது தொழில் துறையினர் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் பிரதமரின் கூட்டத்திற்கு மக்களை திரட்டுவது பாஜகவினருக்கு சவாலாக இருக்க போகிறது என்று பல்வேறு தரப்பினரும் கூறிவந்தனர்.

எதிர்பார்த்ததை விட இருமடங்கு கூட்டம் :
பொதுக்கூட்டத்திற்கு முன்னதாகவே மத்திய உளவுத்துறை மற்றும் தமிழக காவல் துறை ஆகியவை அளித்த அறிக்கையில் 20,000 முதல் 25,000 பேர் வரை கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததைவிட இந்த பொதுக்கூட்டத்திற்கு இரு மடங்கு அதிகமாக மக்கள் வந்துள்ளனர். இது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திருப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மட்டுமே மக்கள் வரவழைக்கப்பட்டனர் என்று கூறுகின்றனர் பாஜகவினர். மேலும் இது தங்களுக்கு உற்சாகத்தையும் எழுச்சியையும் கொடுப்பதாகவும், வரும் தேர்தலிலும் இது கைக்கொடுக்கும் என்றும் கூறுகின்றனர்.

பாஜக தமிழகத்தில் கால்பதிக்குமா?..

தமிழகத்தில் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கட்சிகளும், அதிமுக - பாஜக தலைமையிலான கூட்டணிக்கட்சிளும் அது தவிர டிடிவி தினகரன், கமல்ஹாசன் ஆகியோரும் சிறிய கட்சிகளை சேர்த்து களம் இறங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் தடம்பதிப்பது என்பது பாஜகவின் நீண்ட நாள் கனவாக இருந்து வருகிறது. அதே சமயத்தில் மக்களிடம் அதிமுகவிற்கும் பெரிதாக நன்மதிப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. திருப்பூர் திரண்ட மக்கள் கூட்டத்தால் பாஜக தங்களுக்கான ஆதரவு பெருகிவிட்டதாக கருதுகிறது. அதிமுக - பாஜக கூட்டணி ஏறத்தாழ முடிவாகிவிட்ட நிலையில் இது பாஜகவிற்கான முன்னேற்றமா அல்லது அதிமுகவின் தோல்வியின் தொடக்கமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

News Counter: 
100
Loading...

Ramya