மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்து வைத்த முதலமைச்சர் பழனிசாமி...

share on:
Classic

சேலத்தில் மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுடன் கூடிய மணிமண்டபத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.

சேலம் அண்ணா பூங்காவில் மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு 80 லட்சம் ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைக்க கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் பழனிசாமி இன்று மணிமண்டபத்தை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். அதன் பின்னர் மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்த அவர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, அமைச்சர்கள் சரோஜா, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ஓமலூர் பிரதான சாலைக்கு பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். என பெயர் சூட்டப்படும் என அறிவித்தார்.

News Counter: 
100
Loading...

aravind