நெல் ஜெயராமன் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

Classic

நெல் ஜெயராமனின் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நமது பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் அரும்பணியை ஆற்றிய நெல் ஜெயராமன், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

நமது நெல்லை காப்போம் என்ற இயக்கம் மூலம் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்தவர் என புகழாரம் சூட்டியுள்ள முதலமைச்சர், விவசாயிகளிடையே பாரம்பரிய நெல் ரகங்களை பிரபலப்படுத்தி, அதன் உற்பத்தியை ஊக்கப்படுத்திய நெல் ஜெயராமனின் மறைவு தமிழகத்திற்கும், வேளாண்மைத்துறைக்கும் ஒரு பேரிழப்பாகும் என தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

sasikanth