மக்களவையில் சிறப்பாக செயல்படாத தமிழக எம்.பிக்கள் : மோசமான எம்.பிக்கள் பட்டியலில் இடம்பிடித்த அன்புமணி ராமதாஸ்

share on:
Classic

மக்களவையில் சிறப்பாக செயல்படாதவர்களாக தமிழக எம்.பிக்கள் இருப்பதாகவும், அன்புமணி ராமதாஸ் மோசமான எம்.பிக்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

டெல்லியை சேர்ந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில், 16-வது மக்களவையில் தமிழக எம்.பிக்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றும் தேசிய சராசரியை விட குறைவாகவே தமிழக எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் செயல்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தமிழக எம்.பிக்களின் சராசரி வருகைப்பதிவு 78% மட்டும் தான். இது தேசிய சராசரி அளவைவிட 2% குறைவு. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 40 எம்.பிக்களில் 17 பேர் குறைவான வருகைப் பதிவைக் கொண்டுள்ளனர்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 45% வருகைப்பதிவு மட்டுமே கொண்டு மோசமான எம்.பியாக உள்ளார். கேள்விகள் எழுப்புவது, விவாதங்களில் பங்கெடுப்பது என எதிலும் அவர் அதிகமாக கலந்துகொள்ளவில்லை என்றும் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த எந்த எம்.பியும் 90% அதிகமான வருகைப்பதிவை கொண்டிருக்கவில்லை. ஜூன் 1, 2014 - பிப்ரவரி 13,2019 வரையிலான காலக்கட்டத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எம்.பிக்கள் சுமார் 1,250 தனிநபர் மசோதக்களை மக்களவையில் கொண்டுவந்துள்ளனர். ஆனால் தமிழகத்தை சேர்ந்த எந்த எம்.பியும் ஒரு தனிநபர் மசோதவைக் கூட கொண்டுவரவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மக்களவை உறுப்பினர்கள் தேசிய அளவில் கலந்து கொண்ட விவாதங்கள் 67% ஆக உள்ளது. ஆனால் தமிழக எம்.பிக்கள் கலந்து கொண்ட விவாதங்கள் 47%க்கும் குறைவாக உள்ளது. வெறும் 9 விவாதங்களில் மட்டுமே கலந்து கொண்டு புதுச்சேரி எம்.பி ஆர். ராதாகிருஷ்ணன் மோசமான எம்.பி.யாக உள்ளார். தருமபுரி எம்.பி. அன்புமணி, விருதுநகர் எம்.பி. டி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலா 12 விவாதங்களில் கலந்து கொண்டு அவர்களும் மோசமான எம்.பிக்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். திருநெல்வேலி எம்.பி. கே.ஆர்.பி. பிரபாகரன் 13 விவாதங்களில் கலந்து கொண்டு அவர்களுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

தகவல் : டைம்ஸ் ஆஃப் இந்தியா

News Counter: 
100
Loading...

Ramya