லோக்சபாவை கலங்கடித்த தமிழக எம்.பி.க்கள்..!

share on:
Classic

17 வது மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பிராந்திய மொழிகளில் பல்வேறு வகையான கோஷமிட்டப்படி பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். பதவியேற்பில் நிகழ்ந்த சுவாரஸ்யமான முழக்கங்கள்

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள் தமிழில் பதவி பிரமாணம் செய்து கொண்டனர். 17-வது மக்களவையில் பங்கேற்க இருக்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் நாடுமுழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பிராந்திய மொழிகளில் பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.

மேற்குவங்க மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்கும் போது பாஜகவினர்கள் பாரத் மாதாகி ஜே என கோஷமிட்டனர். அதேபோல் பஞ்சாப் எம்.பிக்கள் இன்குலாம் ஜிந்தாபாத் என முழக்கமிட்டபடி பதவியேற்றுக் கொண்டனர். 

இதையடுத்து பாஜக அல்லாத மாநிலமாக திகழும் தமிழகத்தில் இருந்து சென்ற மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்கும் போது என்ன கோஷமிடுவார்கள் என பெரிதளவு எதிர்பார்க்கப்பட்டது. 

தமிழகத்தின் திருவள்ளூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே. ஜெயகுமார் முதலாவதாக பதவியேற்புக்கு அழைக்கப்பட்டார். 

தமிழகத்தின் முதல் எம்.பியின் உறுதிமொழியிலேயே காந்திஜி, பெரியார் வாழ்க என முழக்கமிட, அதிக பாஜக எம்.பிக்களை கொண்ட சபையில் சலசலப்பு தொடங்கியது. அடுத்தடுத்து வந்த பெரும்பாலான எம்.பிக்கள் கோஷமிட்டபடியே உறுதிமொழி ஏற்றனர். 

தொல் திருமாவளவன், கனிமொழி ஆகியோரும் தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க என கோழபிட்டப்படி பதவியேற்றுக் கொண்டனர்.

சபையில் அடுத்தடுத்த உறுப்பினர்கள் தங்களது உறுதிமொழியோடு முழக்கமிட்டபடி கோஷமிட்டதை கேட்ட சபாநாயகர், குறிப்பில் உள்ளதை மட்டும் படித்து உறுதிமொழியேற்று கொள்ளும்படி கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை கேட்ட பாஜக எம்.பிக்கள் பாரத் மாதாகி ஜே என கோஷமிட்டனர்.

அதன்பின் மீண்டும் தமிழ் உச்சரிப்போடு தொடங்கிய பதவியேற்பு விழாவில், சில உறுப்பினர்கள் தமிழ் வாழ்க என்ற முழகத்தோடு பதவியேற்றுக் கொண்டனர். 

தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ரவீந்திரநாத் குமார் மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்ற பெற்ற அந்த ஒரு வெற்றியாளர் நான்தான் என சபையில் உள்ள 303 பாஜக எம்.பிக்களுக்கு அறிமுகம் செய்வதுபோல் தன் உறுதிமொழியேற்றார் ரவீந்திரநாத் குமார். 

அதேபோல் மற்ற மாநிலத்தை பொறுத்தவரை தெலங்கானாவின் ஐதராபாத் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரான ஏ.ஐ.ஏம்.ஐ.எம் கட்சியின் தலைவர் ஓவைசி பதவியேற்பின் போது, பாஜகவினர் பாரத் மாதாகி ஜே என கோஷமிட்டனர். இந்த கோஷத்திற்கு பதிலளிக்கும் விதமாக அவரின் உறுதிமொழி உரையானது அமைந்தது. 

இரண்டாவது முறை வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நரேந்திரமோடியின் பதவியேற்பின் போது சபையே மோடியின் பெயரால் அதிர்ந்தது.

பரமேஷ்வரனின் பெயரால் உறுதிமொழி ஏற்றுக் கொள்கிறேன் என பதவிப்பிரமாணத்தை தொடங்கினார் பிரக்யா சிங் தாகூர். தனது பெயருடன் புணைப்பெயரை இணைத்து வாசித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த சபாநாயகருடன் சற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டபடி மக்களவை உறுப்பினராக பதவியேற்று கொண்டார். 

அதேபோல், கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல்காந்தி, அனைவருக்கும் நன்றி தெரிவித்தபடி பதவிபிரமாணம் செய்து கொண்டார். 
 

News Counter: 
100
Loading...

aravind