+2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
Classic

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு  கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி நிறைவு பெற்றது. 

இதில், 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார்கள். தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து,

மதிப்பெண்கள் கணிணி மூலம் சான்றிதழில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வந்தது. தற்போது, அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டதை அடுத்து, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

www.dge.tn.nic.in,  www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் இன்று காலை 9.30 மணி முதல் தேர்வு முடிவுகளை பதிவு இறக்கம் செய்துகொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களில் 91.1 % மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாகவும் இதில் மாணவிகள் 94.4 % ,மாணவர்கள் 87.7% தேர்ச்சி அடைந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்

100%தேர்ச்சி பெற்ற பள்ளிகள் எண்ணிக்கை 1907. இதில் விருதுநகர் மாவட்டத்தில் அதிக மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

மாணவர்களுக்கு மன அழதத்தை தரகூடாது என்ற நோக்கில் ரேங்க் சிஸ்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் மாணவர்களின் மதிப்பெண்கள் கொண்டு பள்ளிகள் விளம்பரம் செய்யும் பட்சத்தில் அந்த பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக மாணவர்கள் அரசு பள்ளிகளில் தேர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார்..

மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும்,வருங்காலங்களில் நடத்தபடும் போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள வழிவகுக்கும் வரையிலும் கேள்வி தாள்கள் சற்று கடினமாக கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.    

 

News Counter: 
150

sankaravadivu