தேசிய அளவில் வேலைவாய்ப்பில்லாத மாநிலங்கள் பட்டியலில் தமிழகம்..!

share on:
Classic

தேசிய அளவில் வேலைவாய்ப்பில்லாத மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இணைந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் வேலையின்மை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 2017-2018ம் ஆண்டு காலத்தில் இந்தியாவின் 11 மாநிலங்களில் வேலைவாய்ப்பற்ற உச்சத்தை தொட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீஹார், ஒடிஷா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட், கேரளா, ஹாரியானா மற்றும் அசாம் மாநிலங்களில் அதிக அளவு வேலையின்மை பிரச்னை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

2011-12ம் நடத்தப்பட்ட ஆய்வைவிட தற்போது வேலையின்மை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-2018ம் ஆண்டு வேலையின்மை மாநிலங்கள் பட்டியலில், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், தெலங்கானா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் புதிதாக இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind