முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு இன்று..!

share on:
Classic

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு இன்று நடைபெறுகிறது.

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ. போன்ற முதுநிலை படிப்புகளுக்கான 'டான்செட்' நுழைவுத்தேர்வு, தமிழகம் முழுவதும் 39 மையங்களில் இன்று நடைபெறுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் இந்தத் தேர்வு நேற்று தொடங்கியது. நேற்று காலை எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கான தேர்வும், பிற்பகலில் எம்.பி.ஏ. படிப்புக்கான தேர்வும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று காலை எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க் போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan