டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு

share on:
Classic

18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் 3,000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராவை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் போலி சரக்குகள் விற்பனை அதிகரித்து வருவதாகவும், பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. டாஸ்மாக் விற்பனையை முறைப்படுத்தவும், 18 வயதிற்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்கும் நோக்கிலும் மாவட்ட அளவில் 38 இடங்களிலும், மண்டல அளவில் 5 இடங்களிலும் இருக்கும் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படவுள்ளது.

இதற்காக 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் சுமார் 6 ஆயிரம் சிசிடிவி கேமராக்களை பொருத்த டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.5 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்திற்கு, தனியார் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

News Counter: 
100
Loading...

youtube