ஜியோவிற்கு போட்டியாக களமிறங்க உள்ள டாடா ஸ்கை பிராட்பேண்ட்..!

share on:
Classic

ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் திட்டத்திற்கு போட்டியாக வாடிக்கையாளர்களை கவர டாடா ஸ்கை பிராட்பேண்ட் நிறுவனம் கவர்ச்சிகர ஆஃபரை வழங்கியுள்ளது

சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 42வது ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முகேஷ் அம்பானி ரிலைன்ஸ் ஜீயோ வரும் செப்டம்பர் 5ஆம் தேதியன்று ஜியோ ஃபைபர் திட்டம் தொடங்கப்படும் என்ற மாபெரும் அறிவிப்பையும் வெளியிட்டார். தற்போது இதன் தொடர்ச்சியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக் போட்டியாக டாடா ஸ்கை பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை கவர பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.

 
 
இதன்படி டாடா ஸ்கை பிராட்பேண்ட் வாடிக்கையாளர் 12 மாதங்களுக்கான திட்டத்தைத் தேர்வுசெய்தால், கூடுதலாக ஆறு மாத சேவை இலவச சேவையும், 9 மாத திட்டத்தைத் தேர்வுசெய்தால், கூடுதல் நான்கு மாத இலவச சேவையையும் பெறலாம். டாடா ஸ்கை தற்போது பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, புனே, கொல்கத்தா போன்ற பிரபலமான 21 நகரங்களில் சேவைகளை வழங்கி வருகிறது. ஜியோ ஃபைபர் திட்டம் இன்னும் பயன்பாட்டிற்கு வராததால் டாடா ஸ்கை பிராட்பேண்ட்டிற்கு, மக்களிடையே பெரும் வரவேப்பு இருக்கின்றது. 

 

News Counter: 
100
Loading...

Saravanan