ரூ.120 கோடி வரி ஏய்ப்பு..? அதிர்ச்சி தகவல்..!

share on:
Classic

அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட் உள்ளிட்ட உணவக கடைகளில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் 120 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதற்கான ஆவணங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் முன்னணி உணவகங்களாக உள்ள அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட் உள்ளிட்ட கடைகளில் வருமான வரித்துறையினர் கடந்த 3 ஆம் தேதியில் இருந்து 3 நாட்கள் தொடர் சோதனை நடத்தினர். இந்த கடைகளுக்கு சொந்தமான 32 கிளைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 120 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதற்கான ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், துபாயில் போலியாக முதலீடு செய்ததற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

News Counter: 
100
Loading...

aravind